🌺 பரம புனித ஹரிநாமத்தை ஜபிக்க வேண்டியபோது தவிர்க்கவேண்டிய பத்து அபராதங்கள் 🌺
(பத்ம புராணம், பிரம்ம காண்டம் 25.15–18)
ஆசிரியர்: வ்யாஸதேவர்
- பகவானின் புனித நாமத்தை பரப்ப தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள பக்தர்களை நிந்திப்பது குற்றம்.
- பிரம்மா சிவன் போன்ற தேவர்களின் நாமங்களை விஷ்ணுவின் நாமத்திற்கு சமமாகவும் தன்னிச்சையானவை என்றோ கருதுவது குற்றம்.
- ஆன்மீக குருவின் கட்டளையை மீறுவதும் அவரை ஒரு சாதாரண மனிதராக நினைப்பதும் குற்றம்.
- வேத இலக்கியங்களையும் வேத வழிவந்த நூல்களையும் நிந்திப்பது குற்றம்.
- ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை கற்பனையானது என்று கருதுவது குற்றம்.
- புனித நாமத்திற்கு பௌதீகமான வியாக்கியானம் கொடுப்பது குற்றம்.
- பகவானின் புனித நாமத்தின் பெயரால் பாவ காரியங்கள் செய்வது குற்றம்.
- வேதத்தில் கர்ம காண்ட பகுதியில் செயல்களுக்கு பலனை கொடுக்கும் சடங்குகளுக்கு ஈடாக திவ்ய நாமத்தை கருதுவது குற்றம்.
- நம்பிக்கை இல்லாத நபர்களுக்கு பகவானின் புனித நாமத்தை எடுத்துச் சொல்வது குற்றம்.
- பௌதீக பந்தத்தின் காரணமாக புனித நாமத்தின் மகிமையை அறிந்தும் பூரண நம்பிக்கை இல்லாமல் இருப்பதும் பகவான் நாமத்தை கவனக்குறைவாக உச்சரிப்பதும் குற்றமாகும்.
தன்னை வைஷ்ணவன் என்று கூறிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இவ்வெல்லா குற்றங்களையும் தவிர்த்து கிருஷ்ண பிரேம நிலையை அடைய முயற்சிக்க வேண்டும்.
வாஞ்சா கல்பதருப்யஸ்ச க்ருபா ஸிந்துப்ய ஏவ ச
பதிதானாம் பாவனேப்யோ வைஷ்ணவேப்யோ நமோ நம꞉
பொருள்:
பகவானின் அனைத்து வைஷ்ணவ பக்தர்களுக்கும் நான் பணிவுடன் வணங்குகிறேன். அவர்கள் அனைத்தும் வஞ்சா கல்பவிருட்சம் போன்றவர்கள் —
பிறரின் ஆசைகளை பூர்த்தி செய்யும் சக்தியும், தாழ்ந்த நிலைக்குள்ள ஜீவராசிகளிடம் பேரண்பையும் கொண்டவர்கள்.