🌺 ஶ்ரீமத் பாகவதம் பாராயணத்திற்கு முன் ஸ்லோகங்கள் 🌺

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய (3 Times)

தமிழில் பொருள்:
உயர்ந்த பரம ப்ரபுவாகிய வாஸுதேவருக்கு நான் பணிவுடன் வணங்குகிறேன்.

நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம்
தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயம் உதீரயேத்

தமிழில் பொருள்:
இந்த ஶ்ரீமத் பாகவதத்தை பாராயணம் செய்யும் முன்,
பகவான நாராயணருக்கும், உத்தம மனிதரான நர-நாராயணருக்கும்,
வித்யாதேவியான சரஸ்வதிக்கும், பாகவதத்தை அருளிய வியாசருக்கும்
முன்னரே மரியாதையுடன் வணங்க வேண்டும். பின் அதிலுள்ள ஞான ஜெயம் வெளிப்படும்.
(
ஶ்ரீமத் பாகவதம் 1.2.4)

ஸ்ரிண்வதாம் ஸ்வகதாக்ருஷ்ண
புண்யஸ்ரவணகீர்த்தன
ஹ்ருத்யந்தஸ்தோ ஹ்யபத்ராணி
விதுநோதி ஸுஹ்ருத் ஸதாம்

தமிழில் பொருள்:
பகவான் கிருஷ்ணர், உண்மையான பக்தர்களின் இதயத்தில் உறையும் பரமாத்மா. அவரது கதைகளைச் சிந்தனையுடன் கேட்டல், பாடுதல் ஆகியவை புண்ணியம் தரும். அதனால், பக்தர்களின் இதயத்தில் உள்ள அசுத்த ஆசைகள் ஆசைகள் நீங்கிச் சுத்தம் அடைகின்றன.
(ஶ்ரீமத் பாகவதம் 1.2.17)

நஷ்டப்ராயேஷ்வபத்ரேஷு
நித்யம் பாகவத சேவயா
பகவத்யுத்தம ஸ்லோகே
பக்திர்பவதி நைஷ்டிகீ

தமிழில் பொருள்:
நியமமுள்ள பாகவத பாராயணத்தாலும்,
புனித பக்தர்களுக்குச் சேவையாலும்,
இதயத்தில் உள்ள மோசமான ஆசைகள் அழிந்து,
உத்தம நாமம் கொண்ட பகவானிடம் நிலையான பக்தி ஏற்படுகிறது.
(ஶ்ரீமத் பாகவதம் 1.2.18)

Scroll to Top