ஸ்தாபக ஆச்சார்யர் - தெய்வத்திரு அ.ச. பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா

ஹரிநாம மஹா மந்திரம்
கூட்டுப் பிராத்தனை

கூட்டுப் பிராத்தனையில் கலந்து கொள்வதற்கு, கீழே உள்ள லிங்க் மூலமாக வாட்சப் குரூப்பில் இணையவும்
நேரம்: தினமும் காலை 5:00- 7:30
காலை 5:00 - 7:00 மகா மந்திர உச்சாடனம்
காலை 7:00  பகவத்கீதை ஸ்லோகம் பாராயணம்
காலை 7.10 பகவத் கீதை சொற்பொழிவு
காலை 7.20 கோவை இஸ்கான் கோவில் ஸ்ரீ ஸ்ரீ ஜெகநாதர் தரிசனம்

மஹா மந்திரம் என்றால் என்ன?

மந்திரம் என்றால் மனதை விடுவிப்பது என்று பொருள். அதாவது 'மன் 'என்றால் மனம். 'திரா ' என்றால் விடுவிப்பது. மனதை அதன் துன்பங்களில் இருந்து விடுவிப்பது மந்திரம் ஆகும். ஒரு மந்திரம் ஒரு குறிப்பிட்ட துன்பத்தை மட்டும் நீக்க உதவலாம். ஆனால், மகாமந்திரம் எனப்படுவது எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி வாய்ந்ததாய் இருக்க வேண்டும். மனச் சஞ்சலங்கள், மனச்சோர்வு,  மன அழுத்தம்,  மனக் குழப்பம், தீய சிந்தனைகள்,  சண்டை, சச்சரவுகள், காம,  குரோத, லோப, மத, மாச்சர்யம் மற்றும் அனைத்து விதமான மனதின் துன்பங்களில் இருந்து மனதை விடுவிக்கும் சக்தி ஹரே கிருஷ்ண மந்திரத்திற்கு இருப்பதால் இம்மந்திரத்தை மகாமந்திரம் என்று வேத சாஸ்திரங்கள் அழைக்கின்றன. ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை சொல்ல கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

உச்சரிக்கும் முறை : நம் காதுகளுக்கு கேட்கும் வகையில் தினமும் குறைந்த பட்சம் 108 முறை ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து வந்தால் மன அமைதியையும் சந்தோஷத்தையும் பெறலாம்.

(ஜய) ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபு நித்யானந்த
ஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி கௌர பக்த விருந்த

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம 
ராம ராம ஹரே ஹரே

ஸ்ரீல பிரபுபாதா பிரணாம மந்திரம்

நம ஓம் விஷ்ணு-பாதாய க்ருஷ்ண-ப்ரேஸ்தாய பூ-தலே
ஸ்ரீமதே பக்தி வேதாந்த-ஸ்வாமின் இதி நாமினே
நமஸ்தே ஸாரஸ்வதி தேவே கெளர-வாணி-ப்ரசாரிணே
நிர்விசேஷ-ஸூன்யவாதி-பாஸ்சாத்ய-தேச-தாரிணே 

“பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவரும், அவரது தாமரைப் பாதங்களில் தஞ்சமடைந்தவருமான, தெய்வத்திரு அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதாவிற்கு எனது மரியாதை கலந்த வணக்கங்களை சமர்பிக்கின்றேன்.”

“மாயாவாதமும், சூன்யாவாதமும் நிறைந்த மேற்கத்திய நாடுகளில் சைதன்ய மஹாபிரபுவின் போதனைகளை கருணையோடு பிரச்சாரம் செய்கிறீர்கள். சரஸ்வதி கோஸ்வாமியின் சேவகரே, ஆன்மீக குருவே எங்கள் மரியாதை கலந்த வணக்கங்களை உங்களுக்கு செலுத்துகிறோம்.”